பாராளுமன்ற அடிதடியுடன் தொடர்புடைய இருவர் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்க பரிந்துரை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பாராளுமன்ற அடிதடியுடன் தொடர்புடைய இருவர் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்க பரிந்துரை

பாராளுமன்றத்தில் நேற்று (03) இடம்பெற்ற மோதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மீது அதிகபட்ச ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, அந்த சம்பவம் குறித்து ஆராய்ந்த குழு சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளது.

பிரதி சபாநாயகர் தலைமையிலான குழு நேற்றைய மோதல் தொடர்பில் விசாரணை நடத்தியது.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எழுப்பிய கேள்வியை அடுத்து, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கையில் இந்த மோதல் ஏற்பட்டது.

சம்பவத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க காயமடைந்ததுடன், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக குழுவொன்றை நியமித்த சபாநாயகர், சபை நடவடிக்கைகளை இன்று வரை ஒத்திவைத்தார்.

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால குழுக்களின் பிரதித் தலைவர் உள்ளிட்ட குழுவினர் இன்று தமது பரிந்துரைகள் அடங்கிய விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் கையளித்தனர்.