பாராளுமன்ற அடிதடி – மஹிந்த அணியின் திட்டமிட்ட செயலாகும்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பாராளுமன்ற அடிதடி – மஹிந்த அணியின் திட்டமிட்ட செயலாகும்

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதியில் இறக்குவதற்கே மஹிந்த அணியினர் பாராளுமன்றத்திற்குள் வன்முறையை தொடங்கியுள்ளனர்  என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் கடத்தப்படும்    சம்பவங்கள் நாடு தற்போது சர்வதேச மட்டத்தில் அடைந்துவரும் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிடும்  எனவும் அவர்  குறிப்பிட்டார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் இருந்து வந்த பிரச்சினை தற்போது வன்முறையாக மாறியுள்ளதை காணமுடிகின்றது. பாராளுமன்றத்தில் மஹிந்த அணியினர் நேற்று  ஏற்படுத்திய வன்முறை மூலம் இது தெளிவாகின்றது. இந்த வன்முறையின் சூத்திரதாரிகளாக தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரே செயற்படுகின்றனர்.

இவர்கள் பாராளுமன்றத்தில் பிரச்சினையை ஏற்படுத்தி அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதியில் இறக்கி அதில் பிக்குமாரையும் இணைத்துக்கொண்டு சிங்ஹலே என்பதை வெளிப்படுத்தவே முயற்சித்தனர். அரசாங்கம் தொடர்ந்து இவர்களுடன் கொஞ்சிக்கொண்டிருப்பதை நிறுத்திக்கொண்டு அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்துவார்கள்.