பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட எகிப்து விமானம் காணாமல் போயுள்ளது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட எகிப்து விமானம் காணாமல் போயுள்ளது

பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட எகிப்து நாட்டு விமானம் ஒன்று ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஈஜிட் ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

எம்எஸ்804 என்ற இந்த விமானத்தில் 59 பயணிகளும், 10 விமான பணியாளர்களும் இருந்ததாக ஈஜிப்ட் ஏர் விமான நிறுவன தகவல் மேலும் கூறியுள்ளது.

மத்திய தரைக்கடலின் கிழக்கு பகுதியில் 37,000 அடி (11,300 மீட்டர்) உயரத்தில், இந்த விமானம் பறந்து கொண்டிருந்த போது ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. கெய்ரோ நேரப்படி அதிகாலை 2.45 மணிக்கு (00:45 ஜிஎம்டி நேரம்) இந்த விமானம் ராடரின் தொடர்பை இழந்துள்ளதாக ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலும் தகவல்கள் கிடைத்தவுடன், அது குறித்த அறிக்கையை வெளியிடுவோம் என்று ஈஜிப்ட் ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது