பாலிவுட்டில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பாலிவுட்டில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா

அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ‘காக்கா முட்டை’ படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அனைவர் மத்தியிலும் பெரும் பாராட்டுதல்களை பெற்றார். இப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத ஒரு இடத்தை பிடித்துக் கொடுத்தது.

தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பாலிவுட்டில் கால்பதிக்கவிருக்கிறார். இவருடைய பாலிவுட் முதல் படமே அர்ஜுன் ராம்பாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது தமிழில் ‘இடம் பொருள் ஏவல்’, ‘குற்றமும் தண்டனையும்’, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘மனிதன்’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட பல முக்கிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. மேலும் சில படங்களில் நடித்தும் வருகிறார். விரைவில், பாலிவுட் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.