பிரசன்ன ரணதுங்கவுக்கு சிகிச்சையளிக்க மறுத்த வைத்தியரின் விளக்கம்


பிரசன்ன ரணதுங்கவுக்கு சிகிச்சையளிக்க மறுத்த வைத்தியரின் விளக்கம்

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு நேற்றைதினம் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்க வைத்தியரொருவர் மறுப்பு தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியை மருத்துவர் பேராசிரியர் ரணில் ஜயவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற சென்ற போது, அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், எந்தவொரு நோயாளியையும் பார்க்கவோ அல்லது பார்க்க மறுக்கவோ தனக்கு உரிமை உண்டு என வைத்தியர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் வகையில், தான் அவரை பார்க்க மறுத்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை அறிக்கையொன்றினையும் வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.