பிரதமரின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன; டிலான் பெரேரா

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பிரதமரின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன; டிலான் பெரேரா

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்பாடுகளினால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் அதிருப்தியுடன் இருப்பதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலை நீடித்தால் தாங்கள் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமக்கு தெரியாமல் பிரதமர் சில விடயங்களை முன்னெடுத்து வருகின்றார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுமையுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எவ்வளவு காலம் தான் பொறுமை காக்கமுடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற ஒரு நோக்கத்திற்காக மாத்திரமே பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் அரசாங்கத்தில் நீடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் சுதந்திரகட்சியின் ஆதரவை பெறுமதியற்றது என பிரதமர் கருதக்கூடாது எனவும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.