பிரதமரை திலான் பாராட்டினார்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பிரதமரை திலான் பாராட்டினார்

பொது எதிர்க்கட்சியினரையும் அரசியல் அமைப்பு பேரவைக்குள் உள்ளீர்த்தமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இராஜாங்க அமைச்சர் திலான் பெரேரா பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இருந்த பிரதமர்கள், பதவியில் இருந்தபோதும் அவர்கள் செய்யாத ஒன்றை பிரதமர் ரணில் செய்துள்ளதாகவும் கூறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அவர் தமது கட்சியின் உறுப்பினர்களை அர்ப்பணித்தே, பொது எதிர்க்கட்சியினரை. அரசியல் அமைப்பு பேரவை, அரசியல் மீளமைப்பு நாடாளுமன்ற குழுக்கள் ஆகியவற்றில் உள்வாங்கியுள்ளார்.

இது பிரதமரின் சாணக்கியத்தை உணர்த்துகிறது என்று திலான் பெரேரா தெரிவித்துள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது.