பிரதமர் பதவியை ஏற்க மறுத்தார் சஜித் பிரேமதாச


பிரதமர் பதவியை ஏற்க மறுத்தார் சஜித் பிரேமதாச

இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய விடுத்த கோரிக்கையை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமாயின், சட்டத்தரணிகள் சங்கத்தால் முன்வைக்கப்படும் யோசனைகளுக்கு கீழ் செயற்படும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து மாத்திரமே ஐக்கிய மக்கள் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை வழங்கி, பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் குறித்து, இன்று நடைபெறும் சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் நீண்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று எடுத்துள்ள தீர்மானம்