பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விஷேட உரை


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விஷேட உரை

மக்கள் பொறுமையாக இருக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதியும் மற்றும் அரசாங்கமும் ஒவ்வொரு நொடியும் செயற்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை மையமாகக் கொண்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகின்றார். அந்த உரையின் ஊடாகவே மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரசாயன உரத்தை தடை செய்வதற்கான நேரம் இதுவல்ல, எனவே உர மானியத்தை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் வெளியேறுமாறு கோசங்கள் எழுப்பப்படுகின்றமையானது நாட்டின் ஜனநாயகத்தினை மிகவும் மோசமான நிலைக்கு கொண்டுச் செல்லும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

மேலும், நாட்டில் போராட்டங்களை முன்னெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் டொலர்களை வெகுவாக பாதிப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.