பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் மூவருக்கு அழைப்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் மூவருக்கு அழைப்பு

பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் மூவர் பாராளுமன்ற அரசியலமைப்புச் சபைக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.

புதிய பொலிஸ் மாஅதிபராக நியமிப்பதற்காகவே இவர்கள் அரசியலமைப்புச் சபைக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரதி பொலிஸ் மாஅதிபர்களான ஜீ.டீ.விக்கிரமரத்ன,பூஜித் ஜெயசுந்தர மற்றும் எஸ்.எம்.விக்கிரமசிங்க ஆகிய பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கே அரசியலமைப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர் குறித்த மூவரில், புதிய பொலிஸ் மாஅதிபருக்கான ஒருவரின் பெயரை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.