பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மரின் சொத்துக்களை முடக்க உத்தரவு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மரின் சொத்துக்களை முடக்க உத்தரவு

வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில் பிரேசிலின் கால்பந்தாட்ட நட்சத்திரம் நெய்மரின் சொத்துக்களை முடக்குமாறு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுமார் 50 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய சொத்துக்களை முடக்குவதற்கு பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு முடக்கப்பட்ட நெய்மரின் சொத்துக்களில் அவருடைய தனிப்பட்ட படகு, விமானம், வங்கிக் கணக்குகள் மற்றும் ஏனைய சொத்துக்களும் உள்ளடங்குகின்றன.

கடந்த 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை நெய்மர் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்ந்த வர்த்தகம் தொடர்பாக நெய்மர் 16 மில்லியன் டொலர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரேசிலின் மத்திய வரி நிறுவனத்தின் கணக்காய்வாளர் கூறும் போது, நெய்மர் செலுத்த வேண்டிய தொகைகளை செலுத்தினால் அவர் சிறை செல்வதில் இருந்து விடுபடலாம் என கூறியுள்ளார்.

அத்துடன் அவருக்கு எதிரான இந்த தீர்ப்புக்கு மேன்முறையீடு செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த 2ம் திகதி நெய்மர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் நீதிமன்றத்தினால் 3 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.