பிரித்தானியாவுடன் புதிய உடன்படிக்கைகள்: ஹர்ச டி சில்வா

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பிரித்தானியாவுடன் புதிய உடன்படிக்கைகள்: ஹர்ச டி சில்வா

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகியுள்ளநிலையில், பிரித்தானியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம்தற்போது தயாராகவுள்ளதாக வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இணைந்து இருப்பதா? இல்லையா என்பதுதொடர்பிலான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிந்து செல்வதற்கான அனுமதியைபிரித்தானிய மக்கள் அளித்துள்ளனர்.

இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான கொடுக்கல் வாங்கல்கள் 40 சத வீதமாகவீழ்ச்சியடையும் என பிரதி அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா குறிப்பிட்டார்.

அவ்வாறான நிலை ஏற்படுமாயின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம்முன்ஏற்பாட்டுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.