பிறந்த நாளில் மஹிந்தவுக்கு கிடைக்கவுள்ள இன்ப அதிர்ச்சி!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பிறந்த நாளில் மஹிந்தவுக்கு கிடைக்கவுள்ள இன்ப அதிர்ச்சி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிறந்த நாள் பரிசாக புதிய கட்சி உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சியின் புதிய அரசியல் கட்சி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களாக நடைபெற்ற ஊடக சந்திப்புக்களில் வெளியிடப்பட்ட கருத்துக்களின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியின் உள்ளூராட்சி பிரதிநிதிகள் அமைப்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிறந்த நாள் அன்று அவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு ஒன்று வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது