புகையிரத மிதிபலகையில் செல்பி எடுத்த சீனப் பெண்ணுக்கு இலங்கையில் நேர்ந்த அவலம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


புகையிரத மிதிபலகையில் செல்பி எடுத்த சீனப் பெண்ணுக்கு இலங்கையில் நேர்ந்த அவலம்

அம்பலாங்கொட பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்றில் தூக்கி வீசப்பட்ட நிலையில் சீனப்பெண் (25) ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண், புகையிரத மிதி பலகையில் நின்று கொண்டு செல்பி எடுத்த காரணத்தினாலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு குறித்த சீனப் பெண் செல்பி எடுத்துக் கொண்டிருந்த வேளையில், புகையிரதம் அம்பலாங்கொட மாதம்பை நிலையத்தை அடைந்ததை அடுத்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.