புதிய மின் கட்டண உயர்வு அலகுகளின் அடிப்படையில் விளக்கம்!


புதிய மின் கட்டண உயர்வு அலகுகளின் அடிப்படையில் விளக்கம்!

புதிய மின் கட்டண உயர்வு

31 முதல் 60 அலகுகள் வரை தற்போது அலகொன்றுக்கு அறவிடப்படும் ரூ.10 என்ற தொகை இனி ரூ.37 ஆகவும், 61 முதல் 90 அலகுகள் பிரிவின் கீழ் ரூ.16 ஆக உள்ள கட்டணம் ரூ.42 ஆகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

91 முதல் 120 அலகுகள் வரையிலான பிரிவு மற்றும் 121 முதல் 180 அலகுகள் வரையிலான பிரிவுக்கு தற்போது விதிக்கப்படும் 50 ரூபாய் கட்டணம் 181 அலகுக்கு மேல் உள்ள ஒவ்வொரு அலகுக்கும் தற்போது வசூலிக்கப்படும் 75 ரூபாயிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அதன்படி, முதல் 30 அலகுகளுக்காக நிலையான கட்டணமாக 400 ரூபாயும், 31 முதல் 60 அலகுகள் வரை நிலையான கட்டணமாக 550 ரூபாயும், 61 தொடக்கம் 90 அலகுகள் வரை நிலையான கட்டணம் 650 ரூபாயாகவும் அதிகரிக்கப்படுகிறது.

மேலும், 91 முதல் 120 அலகுகள் வரையிலும், 121 முதல் 180 அலகுகள் வரையிலும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 1500 ரூபாயாக அதிகரித்துள்ளது.