பொது மக்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள புத்தாண்டு பரிசு


பொது மக்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள புத்தாண்டு பரிசு

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பையே அரசாங்கம் பொதுமக்களுக்கு புத்தாண்டு பரிசில்களாக வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தனமல்வில பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நத்தார் கொண்டாட்டங்களுக்கு முன்னர் எரிபொருள் விலையினை அதிகரித்து அதனை நத்தார் பரிசாக பொதுமக்களுக்கு அரசாங்கம் வழங்கியிருந்தது.

அதேநேரம், இன்று முதல் பால்மாவின் விலையினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவே நாட்டின் தாய்மார்களுக்கும், பிள்ளைகளுக்கும் அரசாங்கம் வழங்கும் புத்தாண்டு பரிசாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சுமத்தியுள்ளார்.