புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் இதோ.. சாதனை படைத்தார்கள் தமிழ் மாணவர்கள்!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் இதோ.. சாதனை படைத்தார்கள் தமிழ் மாணவர்கள்!

2016ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி 153 என்ற அதிகப்புள்ளிகள் – கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை, ஆகிய மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்துக்கான வெட்டுப்புள்ளி 152 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

151 என்ற புள்ளியை பதுளை, இரத்தினபுரி,அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா மாவட்டங்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளன.

150 என்ற புள்ளி – நுவரெலியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகியமாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

149 என்ற புள்ளி ஹம்பாந்தோட்டைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்

2016ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி தமிழ் மொழி மூலப்பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களில் சித்தி பெற்றவர்கள், தேசிய ரீதியான சித்தி மட்டத்தில் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதன்படி தமிழ் மொழி மூலம் 195 புள்ளிகளைப் பெற்று வவுனியாவைச் சேர்ந்த மாணவன் கோகுலதாசன் அபிசேகன், தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

தமிழ் மொழி மூலமாக 194 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ள திருகோணமலை உதயராஜன் கௌசிகன் மற்றும் யாழ்ப்பாணம் உமாசங்கர் ஜெயனி ஆகியோர் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.