புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 13 பேருக்கு எதிராக சுவிஸர்லாந்து சட்டமா அதிபர் அந்நாட்டு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

சுவிஸர்லாந்து, ஜேர்மனி மற்றும் இலங்கையை சேர்ந்த 13 பேருக்கு எதிராக இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தமை, பணச் சலவை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்களுக்கு எதிராக இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.