பெண்ணின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பெண்ணின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்பு

ஹட்டன், லெதண்டி தோட்ட காட்டுப் பகுதியிலிருந்து, உருக்குழைந்த நிலையில் பெண்ணின் சடலத்தை ஹட்டன் பொலிஸார் இன்று (23) மீட்டுள்ளனர்.

லெதண்டி தோட்டத்துக்குறிய மாணாபுல் காட்டிலிருந்து இச்சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேற்படி பகுதிக்கு விறகு வெட்டுவதற்காக சென்ற அயலவர்கள் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குழைந்து காணப்படுவதாகவும் அருகில் எலும்புக் கூட்டு எச்சங்கள் காணப்படுதவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சடலத்தில் காணப்பட்ட சாரி மற்றும் கையில் அணிந்திருந்த வலையல் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கண்டெடுக்கபட்ட மனித எச்சங்களை பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.