பெற்ற குழந்தையை 100 ரூபாவுக்கு விற்ப முயன்ற தாய்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பெற்ற குழந்தையை 100 ரூபாவுக்கு விற்ப முயன்ற தாய்

தாய் ஒருவர் பெற்ற பிள்ளையை 100ரூபாக்கு விற்க முயன்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திராவின் சித்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடை ஒன்றில் பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்.

நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தவர், திடீரென கடைக்கு சென்று குழந்தையை வைத்துக் கொண்டு 100 ரூபா தருமாறும் தனது வறுமையை போக்க உதவி செய்யுமாறும் கேட்டுள்ளா ர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸுக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த பொலிஸ்அதிகாரிகள் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குறித்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்த பொலிஸார் பெண்ணையும் குழந்தையையும் அவர்களிடம் ஒப்படைத்தனர்.