அவிசாவெல்ல ,தெம்மிலியான பகுதியில் மகனொருவர் தனது தந்தையை தடி ஒன்றினால் தாக்கி கொலை செய்யதுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன் இவ்வாறு பலியானவர் 66 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுகிறது.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயதுடைய சந்தேக நபரான மகன் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.