பேஸ்புக்கில் கேலிக்குள்ளானார் முன்னாள் ஜனாதிபதி (வீடியோ)

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பேஸ்புக்கில் கேலிக்குள்ளானார் முன்னாள் ஜனாதிபதி (வீடியோ)

சமூக வலைத்தளங்கள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்சவின் பேஷ்புக் கணக்கின் ஊடாக புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க முயற்சித்து மீண்டும் கேலிக்குள்ளாகியுள்ளார்.

டெலி புரேம்டர் உதவியுடன் விமல் வீரவன்ஸ போன்றவர்கள் எழுதி கொடுக்கும் உணர்ச்சி பொங்கும் உரைகளை நிகழ்த்தினாலும், மகிந்த ராஜபக்சவினால் நேரடியாக சில வார்த்தைகளை கூட கோர்த்துப் பேச முடியாதுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மது போதையில் இருந்தாரோ என்ற சந்தேகம் ஏற்படும்படியாக அவரது பேச்சு காணப்பட்டது.

எவ்வாறாயினும் பேஷ்புக் என்பது பொழுது போக்குக்கு பயன்படுத்தப்படுவது என்று கூறிய மகிந்த ராஜபக்சவினர் தள்ளாடி தள்ளாடியாவது பேஷ்புக் வலைத்தளத்திற்குள் வரநேர்ந்தமையானது தலைவிதியின் பகிடியாகும் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

 

https://youtu.be/RBtd3mL_918