பொங்கி எழுந்த ரஜினி ரசிகர்கள்; விஜயகாந்த் கொடும்பாவி எரிப்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பொங்கி எழுந்த ரஜினி ரசிகர்கள்; விஜயகாந்த் கொடும்பாவி எரிப்பு

ரஜினிகாந்த் பின்வாங்கியதைப் போல், நான் ஒருபோதும் பின் வாங்க மாட்டேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஜினி ரசிகர்கள், சென்னை கொடுங்கையூரில் விஜயகாந்தின் கொடும்பாவியை எரித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வில்லிவாக்கத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், தமிழகத்தில் தி.மு.க. 5 தடவையும், அ.தி.மு.க. 3 தடவையும் மாறி, மாறி ஆட்சி செய்து குட்டி சுவராக்கி விட்டார்கள். மழை வந்தபோது நாம் எவ்வளவு கஷ்டப்பட்டோம். நீங்கள் திரும்ப, திரும்ப அவர்களுக்கு வாக்களித்தால் அதே கதி தான் ஏற்படும் என்று கூறினார்.

சட்டசபைக்கு நான் வரக்கூடாது என்று வெறுப்பேற்றினார்கள். சட்டசபைக்கு வராதவர் எல்லாம் எதிர்க்கட்சி தலைவரா? என்கிறார்கள். நான் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் ‘பியூஸ் போன பல்பு’ போலத்தான் இருக்கிறேன்.
ஏமாற்ற பிறந்தவர்கள் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும். நாமெல்லாம் ஏமாறுவதற்காக பிறந்தவர்கள் என்றார் விஜயகாந்த். அடுத்து என்ன நினைத்தாரோ திடீரென டாபிக் மாறினார். ரஜினி நடித்த திரைப்படம் ஒன்றில் சில காட்சிகளை வெட்டி எடுக்கசொல்லி மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதற்கு ரஜினிகாந்த் பணிந்து பின் வாங்கினார். ஆனால், அதேபோன்று, பாமக தலைவர் ராமதாசால் தனக்கு மிரட்டல் வந்தபோது தான் பின்வாங்கவில்லை. எந்த ஒரு விஷயத்திலும் தான் பின்வாங்கியதில்லை.
நல்ல உள்ளம் படைத்தவர் ரஜினிகாந்த். அவரை நாம கூட்டிகிட்டு வரலாம், ஆனால், தேவையில்லாத சண்டை எதுக்கு என்று அவர் நினைக்கிறார்” என்று ஒருவழியாக பேசி பிரச்சாரத்தை முடித்தார்.
விஜயகாந்தின் பேச்சு ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜயகாந்த் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ரஜினி ரசிகர்கள் அவரது கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.