பொசன் நிகழ்வுகளில் பங்கேற்கும் ஜனாதிபதி, பிரதமருக்கு விசேட பாதுகாப்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பொசன் நிகழ்வுகளில் பங்கேற்கும் ஜனாதிபதி, பிரதமருக்கு விசேட பாதுகாப்பு

பொசன் பௌர்ணமி தின நிகழ்வுகளில் பங்கேற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு இம்முறை பொசன் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபத்தப்பட உள்ளனர்.

சுமார் 360 பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இன்று முதல் 19ம் திகதி வரையில் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்து பொசன் நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர்.