பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – இருவார கால அவகாசம்


பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – இருவார கால அவகாசம்

வெளிநாட்டு நாணயங்கள் வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு மத்திய வங்கிய முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி, இலங்கையர்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பில் மேலும்,

மேலதிகமாக வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயங்களை வங்கியின் வெளிநாட்டுக் கணக்கில் வைப்புச் செய்வதற்கோ அல்லது அவற்றை ரூபாவாக மாற்றுவதற்கோ இருவார கால அவகாசம் வழங்கப்படும்.

எனினும் மேலதிக வெளிநாட்டு நாணயங்கள் வங்கியில் வைப்புச் செய்யாமல் கைகளில் வைத்திருப்பவர்கள், அந்த பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதைத் தெளிவுபடுத்துவதற்கும் இரு வார கால அவகாசம் வழங்கப்படும்.

இருவாரத்தின் பின்னர் உரிய அளவை காட்டிலும் மேலதிகமாக வெளிநாட்டு நாணயத்தை கைகளில் வைத்திருப்பவர்களிடம் அபராதம் அறவிடப்படும்.

அது அவர்கள் கையில் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயங்கள் தொகையை விடவும் அதிகமானதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு செய்திகள்; உலக நாடுகளில் இலங்கையர்களுக்காக காத்திருக்கும் வாய்ப்புக்கள்

ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் வைப்புச் செய்யும் வௌிநாட்டவர்களுக்கு இலங்கையில் வதிவிட வீசா