பொன்சேகா ஐ.தே.க வின் உறுப்பினராகின்றார்.

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பொன்சேகா ஐ.தே.க வின் உறுப்பினராகின்றார்.

தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சரத் பொன்சேகாவுக்கு இன்று சிறிகொத்தவில் வைத்து பிரதமர் தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

(அத தெரண)