பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் – சரத் வீரசேகரவின் அதிரடி


பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் – சரத் வீரசேகரவின் அதிரடி

பொரளை ‘ஓல் செயின்ட்ஸ்’ தேவாலயத்தில், கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் சில சந்தேகநபர்களைக் கைதுசெய்ய காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மீரிகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் பிரதான சந்தேகநபராவார் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொரளையில் உள்ள தேவாலயமொன்றில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் இதுவரை 14 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இன்னும் நிறைவடையவில்லை என பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சம்பவத்துடன் தொடர்புடைய சகல நபர்களுக்கு எதிராக தகுதி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பொரளை பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் தற்சயம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேவாலய வளாகத்தை அண்மித்த பகுதிகளில் இருந்து பெறப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஆதாரங்கள் பதிவு செய்யும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இதுவரை 14 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முறைகள் நிபுணர்கள் மற்றும் நிபுணர்களின் ஆதரவுடன் விசாரணைகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா குறிப்பிட்டுள்ளார்.