பொலிஸார் அதிரடி; ஒரே நாளில் 219 பேர் கைது – காரணம் இதுதான்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பொலிஸார் அதிரடி; ஒரே நாளில் 219 பேர் கைது – காரணம் இதுதான்

ஒரேநாளில் மது போதையில் வாகனம் செலுத்திய 219 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களில் அதிகளவு மோட்டார் சைக்கிள் சாரதிகளே அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, நேற்று 126 மோட்டார் சைக்கிள் சாரதிகள், 68 முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கார், லொரி, வேன் சாரதிகள் என 219 பேர் இவ்வாறு கைதாகியுள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் மது போதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கைதுசெய்யும் பொருட்டு நேற்று முதல் நாடளாவிய ரீதியில் விஷேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.