பொலிஸ் அதிரடி; புலிகளின் முன்னாள் புலனாய்வு பொறுப்பாளரும் கைது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பொலிஸ் அதிரடி; புலிகளின் முன்னாள் புலனாய்வு பொறுப்பாளரும் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கலையரசன் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் திருக்கோவில் பகுதியில் வைத்து முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்  ராம் கைது  செய்யப்பட்டதை தொடர்ந்தே திருகோணமலை அரசடிப் பகுதில் வைத்து கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை தமி­ழீழ விடு­த­லைப் ­பு­லி­களின் சாள்ஸ் அன்­ரனி படைப்­பி­ரிவின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான நகுலன் என அழைக்­கப்­படும் கண­ப­திப்­பிள்ளை சிவ­மூர்த்தி என்­பவர் நேற்­று முன்தினம் முற்­பகல் 11 மணி­ய­ளவில் நீர்­வேலி தெற்குப் பகு­தியில் அமைந்­துள்ள அவ­ரது வீட்டில் வைத்து சிவில் உடையில் வந்­த நான்கு பேரால் கைது செய்யப்பட்டார்.

இதுவரை மூன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிரூபர்