பொலிஸ் ஊடகப் பிரிவு இடைநிறுத்தப்பட்டது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பொலிஸ் ஊடகப் பிரிவு இடைநிறுத்தப்பட்டது

பொலிஸ் ஊடகப் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு அறிவித்துள்ளது.

புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் பணிப்புரைக்கு அமையவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள அறிவிப்பொன்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் காரணமாக இந்த பிரிவை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.