பௌத்த மதகுருமார் உட்பட ஐவருக்கு வவுனியா நீதிமன்றம் அழைப்பாணை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பௌத்த மதகுருமார் உட்பட ஐவருக்கு வவுனியா நீதிமன்றம் அழைப்பாணை

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை தொடர்பில் இரு பௌத்த மதகுருமார் உள்ளிட்ட ஐவருக்கு வவுனியா நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

கடந்த 25 ஆம் திகதி  வீதியைப் புனரமைத்து தருமாறு கலாபேபஸ்வேவ உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிங்கள மக்கள் வீதிப் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் 5 மணிநேரம் ஏ9 வீதி உள்ளிட்ட வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் வவுனியா பொலிசார் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து ஐவருக்கு நீதிமன்றம் நேற்றைய தினம் அழைப்பாணையை அனுப்பியுள்ளது.

இதன்படி இந்த ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இரு பௌத்த மதகுருமார், கலாபேபஸ்வேவ பாடசாலை அதிபர், வவுனியா நகரசபை முன்னாள் உறுப்பினர் உட்பட ஐவருக்கே இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி அவர்களை வவுனியா நீதிமன்றில் முற்படுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.