மகளிர் இருபதுக்கு 20 இன்று இரண்டு போட்டிகள்!


மகளிர் இருபதுக்கு 20 இன்று இரண்டு போட்டிகள்!

மகளிர் இருபதுக்கு20 உலக கிண்ணக்

மகளிர் இருபதுக்கு20 உலக கிண்ணக் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன.

இதன்படி, இந்திய மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி கெப் டவுனில் இலங்கை நேரப்படி இன்று மாலை 6.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் பங்களாதேஷ் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இன்றிரவு 10.30 அளவில் இடம்பெறவுள்ளது.

இதனிடையே, மகளிர் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன

குழு “பி”யின் கீழ், முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது

இதன் போது, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது

அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 138 ஒட்டங்களை பெற்ற நிலையில், மேற்கிந்திய அணியால் 135 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனிடையே, அந்த பிரிவின் கீழ் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அஸ்திரேலியா 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.