மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13ம் திகதி; அன்றைய நாள் துக்க தினம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13ம் திகதி; அன்றைய நாள் துக்க தினம்

காலஞ்சென்ற அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ளன.

இதனையடுத்து அன்றைய தினத்தை உள்விவகார அமைச்சு தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது.

காலஞ்சென்ற அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் பூதவுடல் இன்று காலை அஸ்கிரி விகாரைக்கு எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் அவரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

கீழே விழுந்த நிலையில் சுயநினைவை இழந்த கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர், நேற்று கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், நேற்று மாலை அவர் இறைபாதம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.