மகிந்தவை பின்பற்றும் மைத்திரி!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மகிந்தவை பின்பற்றும் மைத்திரி!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 65 ஆம் ஆண்டு பூர்த்தி இன்று குருநாகலில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக அரச உடைமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குருநாகல் மாவட்டத்தை அலங்கரிப்பதற்கும், சுவரொட்டிகளை ஒட்டுவதற்கும் பிரதேச சபையில் உள்ள வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டுவஸ்நுவர, மாவத்தகம மற்றும் வாரியபொல அகிய பிரதேச சபை பகுதிகளில் உள்ள வாகனங்கள் இவ்வாறு சுவரொட்டி ஒட்டுவதற்கும் பல்வேறு வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பெயரை ஊக்குவிப்பதற்காக மகிந்தவின் ஆட்சிக் காலத்திலும் இவ்வாறு அரச சொத்துக்கள் மற்றும் நிதிகள் பயன்படுத்தப்பட்டன.

மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் இடம் பெற்ற இவ்வாறான சம்பவங்கள் நல்லாட்சிஅரசாங்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் மைத்திரி நிர்வாகத்திலும் கூட இடம்பெற்றுக் கொண்டு தான் வருகின்றன என அரசியல் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும்,ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு கொண்டாட்டநிகழ்வுகளுக்கு அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்திற்கும் மகிந்த அரசாங்கத்திற்கும் என்ன வித்தியாசம்? மகிந்த ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட மோசடிகளே தற்போதும் இடம்பெற்றுக் கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.