மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்கின்றன!– மஹிந்த

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்கின்றன!– மஹிந்த

வாழ்க்கைச் செலவு பிரச்சினையை மக்கள் மறந்து விட வேண்டும் என்பதற்காகவே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்க முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்மி

கவும் வேகமாக மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்வடைந்து செல்கின்றது.

இது குறித்த மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் தற்போதைய ஆட்சியாளர்கள், தமக்கு எதிராக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளை கைது செய்து சிறையில் அடைக்கின்றார்கள்.

இன்று ஆச்சரியப்படும் வகையில் வாழ்க்கைச் செலவு உயர்வடைந்துள்ளது.

இன்று யார் கைது செய்யப்பட போகின்றார்கள், நாளை யார் கைது செய்யப்படுவார்கள்? அவரை கைது செய்வார்கள் இவரைக் கைது செய்வார்கள் என மக்கள் நினைக்கின்றார்கள்.

அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு குறித்த பிரச்சினையை மக்களிடமிருந்து திசை திருப்பும் நோக்கில் இடைநிறுத்தாமல் கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மக்களுக்கு தெரியாமலேயே வாழ்க்கைச் செலவு உயர்வடைந்து செல்கின்றது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.