மது பிரியர்கள் அதிர்ச்சியடையும் ஒரு செய்தி


மது பிரியர்கள் அதிர்ச்சியடையும் ஒரு செய்தி

மது பிரியர்கள் அதிர்ச்சியடையும் வகையில் எதிர்வரும் நாட்களில் மதுபானம் மற்றும் சிகரட்டின் விலையை அதிகரிப்பது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு சிறப்பு சந்தைப் பொருள் மற்றும் சேவை வரியை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவிற்கு அமைய இந்த விலை அதிகரிப்பு இடம்பெறலாம் என நிதி அமைச்சினை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறப்பு சந்தைப் பொருள் மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச முன் வைத்த யோசனைக்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழ்னக்கியுள்ள நிலையில், மிக விரைவில் மதுபானம், சிகரட்டுக்களின் விலைகளில் மாற்றம் ஏற்படும் என அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.

மதுபானம், சிகரெட்டுகள், சூதாட்டம் மற்றும் சூதாட்ட விடுதிகள் போன்றவை தொடர்பில் சிறப்பு சந்தைப் பொருள் மற்றும் சேவை வரியை விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

எனினும் குறித்த வரியின் வீதம் இதுவரை இறுதி செய்யப்படாத நிலையில், நாடாளுமன்றுக்கு சட்ட மூலம் ஒன்றினை கொண்டு வந்து வரியை அமுல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.