மத்திய வங்கி ஆளுனர் பதவியை அரசியலாக்க கூடாது!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மத்திய வங்கி ஆளுனர் பதவியை அரசியலாக்க கூடாது!

அரசியல் பிரமுகர்களை மத்திய வங்கி ஆளுனர் போன்ற பதவிகளுக்கு நியமிப்பது தகுதியற்றது என்பதே தனது தனிப்பட்ட கருத்து என, பிரதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

தான் அப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக, சில ஊடகங்கள் செய்தி வௌியிட்ட போதும், அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மத்திய வங்கியின் உயர் பதவியை அரசியல்மயமாக்குவது சிறந்ததல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் தனக்கு ஆணையை வழங்கியது மக்களுக்கு சேவை செய்யவே என குறிப்பிட்ட அவர், அந்த பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது எனவும் கூறினார்.

நேற்றையதினம் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு கொழும்புக்கு ரயிலில் திரும்பிய வேளை,ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே எரான் விக்ரமரத்ன இவ்வாறு பதிலளித்துள்ளார்.