மனித உரிமைகள் பேரவையின் தீர்மான
மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட 51-1 தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் மீண்டும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தியுள்ளது.
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக இதனை வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது வழக்கமான அமர்வில் உரையாற்றிய அவர், மனித உரிமைகள் பேரவையினால் இலங்கையின் அனுமதியின்றி 51-1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த ஒக்டோபரில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கூறிய ஸ்ரீலங்காவின் நிலைப்பாட்டை மீண்டும் தாம் வலியுறுத்துவதாக குறிப்பிட்ட அவர், பேரவையின் தீர்மானத்தை நிராகரிப்பதாக குறிப்பிட்டார்.
இலங்கையின் வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை வலுப்படுத்தும். தீர்மானம் 46-1 இன் ஸ்ரீலங்காவின் நாட்டு மக்களுக்கு உதவாது.
அது இலங்கை சமூகத்தை பிளவுப்படுத்தும், அத்துடன் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்கு உதவாது என்று ஹிமாலி குறிப்பிட்டுள்ளார்.
மோதல், தேர்வு மற்றும் ஒருதலைப்பட்சம் ஆகியவற்றின் மூலம் அல்லாமல், உரையாடல் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வெவ்வேறு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சரவை உபகுழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை உருவாக்குதல், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குதல், வடக்கு மற்றும் கிழக்கிற்கான விரைவான அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் விடயங்களுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட விடயங்களை விரைவாகத் தீர்க்க வேண்டிய விடயங்களை இந்தக் குழு அடையாளம் கண்டுள்ளது.
குறிப்பாக காணாமல் போனவர்கள், மீள்குடியேற்றம் மற்றும் காணி தொடர்பான விடயங்களும் இவற்றில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்
இலங்கையின்;; அரசியலமைப்பின் 21வது திருத்தம், 2022 அக்டோபரில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
இது, சுயாதீன மேற்பார்வை, அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் அமைப்பு ஆகியவற்றை மேலும் பலப்படுத்துகிறது என்றும் அருணதிலக கூறியுள்ளார்.
ஏனைய புதிய செய்திகள் – இதையும் பாருங்கள்!
- உலகத் தமிழர்களுக்கு புதிய நம்பிக்கை அளிக்கும் ஆதாரங்களுடன் வருவேன்!
- நாட்டில் பெரும்பாலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்!
- உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்!
- நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் பாரிய நிலநடுக்கம்!
- imfக்காக வட்டி விகிதங்களை உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
- இந்தியாவுக்கு மீண்டும் நன்றி தெரிவித்த அலி சப்ரி!
- சி.ஐ.ஏ இன் பணிப்பாளர் ரகசிய விஜயம் – இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?
- கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் ரணில் தொலைக் காணொளி கலந்துரையாடல்!
- உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விரைவில் தீர்மானம்!
- இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பிலான பிரேரணை
மனித உரிமைகள் பேரவையின் தீர்மான