மனித உரிமைப் பேரவையின் 32வது அமர்வு இன்று ஆரம்பம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மனித உரிமைப் பேரவையின் 32வது அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 32வது அமர்வு இன்றைய தினம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி குறித்த அமர்வுகள் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இதன்போது சில நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் குறித்த அறிக்கை கவனத்தில் கொள்ளப்படவுள்ளதோடு, இலங்கை குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹீசெய்ன் உள்ளிட்ட குழுவினர் அண்மைக் காலங்களில் அடிக்கடி இலங்கை வந்து, இங்குள்ள மனித உரிமை நிலவரங்கள் குறித்து ஆராய்ந்தனர்.

இதன்படி, இலங்கை குறித்து அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை, மனித உரிமை அமர்வுகளின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

(அத தெரண)