மனைவியை அச்சுறுத்தி எதிர் வீட்டு யுவதியுடன் உறவு கொண்ட கணவன்; இலங்கையில் சம்பவம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மனைவியை அச்சுறுத்தி எதிர் வீட்டு யுவதியுடன் உறவு கொண்ட கணவன்; இலங்கையில் சம்பவம்

மனை­வியை அச்­சு­றுத்தி எதிர் வீட்டு யுவ­தி­யுடன் உறவைப் பேணி­வந்து பின்னர் அவரை கர்ப்­ப­வ­தி­யாக்­கிய குடும்­பஸ்தர் ஒருவர் பிர­தேச இளை­ஞர்­களால் நையப்­பு­டைக்­கப்­பட்­டுள்ளார்.

சம்­பவம் தொடர்பில் குறித்த குடும்­பஸ்­தரும் அவ­ரது மனை­வியும் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட அதே­வேளை காயங்­க­ளுக்­குள்­ளான குடும்­பஸ்தர் வைத்­தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

கம்­பளை கீரப்­பன எனும் பிர­தே­சத்­தி­லேயே மேற்­படி சம்­பவம் கடந்த 23ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது. 37 வய­து­டைய குடும்­பஸ்­தரே 18 வய­து­டைய யுவ­தியை மயக்­க­மாத்­திரை கொடுத்து கர்ப்­ப­வ­தி­யாக்­கி­யி­ருப்­ப­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்ளது.

37 வய­து­டைய குறித்த நபர் எதிர் வீட்டில் குடி­யி­ருந்த 18 வயது யுவ­தி­யுடன் தகாத உற­வைப்­பேணி வந்­த­மையால் குறித்த யுவதி தற்­பொ­ழுது 4 மாத கர்ப்­பி­ணி­யாக இருப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

மேற்­படி நபர் தனது மனை­வியை அச்­சு­றுத்­தியே குறித்த யுவ­தி­யுடன் தொடர்பைப் பேணி வந்­துள்­ள­தா­கவும் யுவ­திக்கும் அந்­ந­ப­ருக்­கு­மி­டையே கடிதப் பரி­மாற்­றங்­களும் இடம்­பெற்று வந்­துள்­ளமை பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

மேற்­படி யுவதி பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில் மேற்­கு­றிப்­பிட்ட நப­ரு­ட­னான முதல் சம்­ப­வ­மா­னது அவரின் மனைவி தனக்கு அருந்த கொடுத்த பானத்தில் ஏதோ ஒரு வகை மயக்க மாத்­திரையைக் கலந்து கொடுத்­ததன் பின்னரே நிகழ்ந்­த­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

மேற்­கு­றிப்­பிட்ட சம்­பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சிகிச்சை பெற்று வரும் நபரையும் அவரின் மனைவியையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த ஏற்பாடுகள் செய்து வருவதாக தெரிவித்தனர்.