மலேசியாவில் ஐ.தே.க அமைச்சரை சந்தித்தார் மகிந்த!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மலேசியாவில் ஐ.தே.க அமைச்சரை சந்தித்தார் மகிந்த!

மலேசியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இரவுஉணவு வேளையில் அமைச்சர் தயா கமகே மற்றும் அவரது மனைவி, பிரதி அமைச்சர் அனோமாகமகே ஆகியோர் இலங்கையின்முன்னாள் ஜனாபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

அவர்களுக்கு இடையிலான இந்த உரையாடல் நட்பு மிக்கதாக இருந்ததாக உயர்ஸ்தானிகராலயவட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மகிந்தவுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட உபாலி கொடிக்கார, லொஹான் ரத்வத்த மற்றும்தினேஸ் குணவர்தன ஆகியோர் இருந்தார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் இடம் பெறும் ஆசிய அரசியல் கட்சி மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காகவே தயா கமகே மற்றும் மகிந்த ஆகியோர் மலேசியா சென்றுள்ளார்கள்.

அமைச்சர் தயா கமகே ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதியாகவே அந்த மாநாட்டில்கலந்து கொண்டுள்ளார்.

அத்துடன் அமைச்சர் தயா கமகே ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டின் சிரேஸ்ட துணைத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.