மலேசிய உதவிப் பிரதமருக்கும் இலங்கை பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மலேசிய உதவிப் பிரதமருக்கும் இலங்கை பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

மலேசியாவின் உதவிப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடிக்கும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லமான அலரிமாளிகையில் இன்று காலை 9.40 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதன் பின்னர் அமைச்சரவை கட்டிடத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்துள்ளதாக அமைச்சரவை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஹமட் ஸாகிட் ஹமிடி, இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.