மலையகத்தில் படித்தவர்கள் அரசியலுக்கு வருவதில்லை என்பது பொய் – வருபவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்!


மலையகத்தில் படித்தவர்கள் அரசியலுக்கு வருவதில்லை என்பது பொய் – வருபவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்!

மலையக அரசியல் மாயை

மலையக அரசியல் மாயை

மலையகத்திலே படித்தவர்கள் அரசியலிலே பங்கேற்பதல்லை என்கின்ற மாயையை உருவாக்கி தாங்கள்தான் சகலருக்கும் தலைமை வழங்குகிறோம் என மரபுசார் அரசியல் தலைமைகள் பொய்யான புனைவு அரசியலை முன்வைத்து வருவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால் உண்மை நிலை அதுவல்ல. மலையகத்திலே ஆரம்பத்தில் இருந்தே அறிவார்ந்த அரசியலை முன்வைத்துச் செயற்பட்ட பல ஆளுமைகளை அடையாளம் காட்ட முடியும்.

மலையகத்தில் படித்தவர்கள் அரசியலுக்கு வராமல் ஓரங்கட்டப்படுகின்றார்கள் என்பதை அரசியல் மட்டத்தில் இருந்து மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

அதற்கு மலையகத்தில் மாற்று அரசியல் கலாசாரம் அவசியம் என உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிறுத்தி அக்கரப்பத்தனை பிரதேச முதன்மை வேட்பாளரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராணிவத்தை வட்டார வேட்பாளருமான இளம் பட்டதாரி நீலா பன்னீர்செல்வத்தினை ஆதரித்து பெரிய ராணிவத்தை, மவுசால்ல தோட்டங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.