மஹரகம பிரதேசத்தில் நிர்வாணமாக பாதையில் திரிந்த பெண்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மஹரகம பிரதேசத்தில் நிர்வாணமாக பாதையில் திரிந்த பெண்

மஹரகம பிரதேசத்தில் பல பகுதிகளில் பிறந்தமேனியுடன் அழைந்து திரிந்த பெண்ணொருவரை இன்று முற்பகல் மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மஹரகம இளைஞர் சேவை மன்றம், புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட இடங்களிலேயே இப்பெண் பிறந்த மேனியுடன் அழைந்து திரிந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த பெண் இருந்த இடத்துக்கு சென்ற பெண்பொலிஸார், அவரைக் கைது செய்துள்ளனர். அப்பெண்ணை கைது செய்யும் போது, அவரது உடலில் சட்டையொன்று போர்த்தப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் எல்பிட்டிய, பிட்டிகலயைச் சேர்ந்த பெண் திருமணமானவர் எனவும் இவரை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார்மேலும் தெரிவித்தனர்.