மஹிந்தவின் அடுத்த நகர்வு; அம்பலமான இரகசியங்கள்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மஹிந்தவின் அடுத்த நகர்வு; அம்பலமான இரகசியங்கள்

முக்கியமான தீர்மானங்கள் எடுப்பது குறித்து, மஹிந்த ஆதரவு எதிரணியினர் இம்மாதம் 21ஆம் திகதி கொழும்பில் கூடி முக்கியமான தீர்மானங்களை எடுக்கவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தின், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மே தினப் பேரணி தொடர்பில் ஆராயப்படவுள்ளதுடன், அதன் பின்னர் மஹிந்த நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை விடுவிப்பார் என்றும் எதிரணியினர் குறிப்பிடுகின்றனர்.

புதுவருடத்துக்குப் பின்னர் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் மேதின நிகழ்வுகளை தனித்து நடத்துவது தொடர்பில் விசேடமாக ஆராயவுள்ளதாகவும் எதிரணியிலுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.

கடந்த முறையைப் போன்று இம்முறையும் பொது எதிரணியினர் மே தின நிகழ்வுகளை தனித்துக் கொழும்பில் நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், மஹிந்தவிற்கு ஆதரவான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலரும் அதில் பங்கேற்கவுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கொண்டாட்டங்கள் காலியில் நடைபெவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மஹிந்த அணியினர் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடடிக்வைக எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.