மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கும் தீர்மானம்! இடைநிறுத்திய ஜனாதிபதி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கும் தீர்மானம்! இடைநிறுத்திய ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்பினை நீக்கும்தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப்பாதுகாப்பினை அகற்றி அதற்கு பதிலாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த பாதுகாப்புஅமைச்சு தீர்மானித்திருந்தது.

எனினும் இந்த தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்துமாறுபாதுகாப்பு அமைச்சிற்கு அறிவித்துள்ளார்.

இதன்படி தமது பாதுகாப்பிற்கு தற்போது கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 103 இராணுவஉத்தியோகத்தர்களும் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளஇராணுவத்தினரை நீக்கி அதற்கு பதிலாக பொலிஸார் பாதுகாப்பு கடமையில்ஈடுபடுத்தப்படுவர் எனவும், சிவில் பாதுகாப்புப் பணிகளில் படையினரைஈடுபடுத்துவது பிழையானது எனவும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சிகடந்த 7ம் திகதி அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.