மஹிந்தவின் திடீ ர் தாய்லாந்து விஜயத்திற்கான காரணம் வௌியானது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மஹிந்தவின் திடீ ர் தாய்லாந்து விஜயத்திற்கான காரணம் வௌியானது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்தின் சில பௌத்த மதஸ்தானங்களில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே தாய்லாந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை தாய்லாந்துக்கு புறப்பட்டடு சென்றிருந்தார்.

அவர் இன்று காலை 7.30 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச்  சொந்தமான யு.எல் 890 என்ற விமானத்தில் தாய்லாந்தின் பாங்கொக்கிற்கு பயணமானார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸூம் தாய்லாந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.