மஹிந்தவின் வளர்ப்பு சரியில்லை..! மைத்திரிக்கும் ஆபத்து

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மஹிந்தவின் வளர்ப்பு சரியில்லை..! மைத்திரிக்கும் ஆபத்து

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒழுங்காக வளர்த்திருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது என குற்றம் சுமத்தியுள்ள கூட்டு எதிர்க்கட்சி அவரின் வளர்ப்பு சரியில்லை எனவும் கூறியுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மஹிந்தவுக்கு செய்த துரோகத்தினை போன்று ஜனாதிபதி மைத்திரிக்கும் செய்ய மாட்டார்கள் என கூறமுடியாது.

திருடனின் தாயிடம் திருட்டு தொடர்பில் குறி பார்ப்பதற்கு ஒப்பானவகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் மோசடிகள் தொடர்பான விசாரணைகளும் அமைந்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் உடன் இருந்தவர்களும் இதற்கு உடந்தையாக தற்போது செயற்படுகின்றனர் என அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த நிலை இன்று ஏற்பட்டிருக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.