மஹிந்தவுக்கு அதிஷ்ட காற்று வீச ஆரம்பித்துள்ளதாம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மஹிந்தவுக்கு அதிஷ்ட காற்று வீச ஆரம்பித்துள்ளதாம்

அரசியல் ரீதியாக பல பின்னடைவுகளை சந்தித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாதமான நிலைகள் ஏற்பட்டுள்ளன.

அண்மையில் இரத்தினபுரியில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் கலந்து கொண்ட மக்களின் அடிப்படையில் இந்த சாதக தன்மை ஏற்பட்டுள்ளது.

சமகால அரசாங்கத்திற்கு எதிராக புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போவதாகவும் அது தொடர்பாக அறிவிப்பாக இந்த பேரணி அமையும் என மஹிந்த தரப்பினரால் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இவ்வாறானதொரு நிலையில் கிராமப்புறங்களை சேர்ந்த பெருமளவான மக்கள் தமது ஆதரவை வழங்கியதாக தெரிய வருகிறது.

தற்போது ஏற்பட்டிருக்கும் சாதக தன்மைகான காரணத்தை மஹிந்த தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கிலேயே மக்கள் அங்கு பங்கேற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

காலி நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரி பேரணியில் கலந்துக் கொண்ட மக்களிடம் இருந்து சிறப்பான பதில் ஒன்று கிடைத்தது. எங்களுக்கு இது மகிழ்ச்சி அளிக்கும் விடயமாகும்.

எப்படியிருப்பினும் இவை அனைத்தின் ஊடாக இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் எதிர்ப்பினை காண முடிந்தன. நாங்கள் எதிர்வரும் வேலைத்திட்டங்களுக்காக எதிர்க்கட்சியாக மேற்கொள்ள வேண்டிய அனைத்தையும் மேற்கொள்வோம்.

அதற்கான அனைத்து திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றது. புதிய கட்சி அமைப்பதாக கூறினார்கள் எங்கே அமைக்கவில்லை என பலர் கூறுகின்றனர்.

கட்சியை உருவாக்குவது எதிர்க்கட்சி அல்ல மக்களே, எனவே அவர்களுக்கு நான் பதில் கூற முடியும். மக்களுக்கு தேவையான நேரத்தில் அவசியமான முறையில் புதிய கட்சி உருவாக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரத்தினபுரி பேரணியில் கலந்து கொள்பவர்களுக்கு மதுபான போத்தலும், 500 ரூபா பணமும் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரூந்துகளில் மக்கள் ஏற்றப்பட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.