மஹிந்தவை பதவி விலகுமாறு கூறினாரா கோட்டாபய ராஜபக்ஷ?


மஹிந்தவை பதவி விலகுமாறு கூறினாரா கோட்டாபய ராஜபக்ஷ?

ஜனாதிபதி ஒருபோதும் தன்னை பதவி விலகுமாறு கூறவில்லை. கூறவும் மாட்டார் என தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் இன்று (27) அலரி மாளிகைளில் நடைபெற்ற சந்திப்பிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்துள்ள அவர்,

வெளிநாட்டு உதவிகளைப் பெற்று நாட்டை கட்டியெழுப்புவதற்கான ​வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் முடங்கியிருந்த மக்களை மீண்டும் அன்றாட செயற்பாடுகளுக்கு அழைத்து வரும் சவாலில் நாம் வெற்றி பெற்றோம். இன்று அவர்களுள் சொற்பமானவர்களே காலி முகத்திடலுக்கு வந்து எம்மை செல்லுமாறு கூறுகின்றனர்.

குற்றங்களை சுமத்த முடியும் ஆனால் அவற்றை நிரூபிக்க வேண்டும். அதைவிடுத்து அரசியலமைப்பை மீறி இந்த நாட்டை அராஜகமாக்க முடியாது.

இடைக்கால அரசாங்கம் உருவாக்கத் தயார்; ஜனாதிபதி அறிவிப்பு